Jul 29, 2026
Thisaigal NewsYouTube
SPM தேர்வில் சிறந்த அடைவு நிலை : அனைத்து மாணவர்களுக்கும் லாபிஸ் எம்.பி. வாழ்த்து
தற்போதைய செய்திகள்

SPM தேர்வில் சிறந்த அடைவு நிலை : அனைத்து மாணவர்களுக்கும் லாபிஸ் எம்.பி. வாழ்த்து

Share:

2023 ஆம் ஆண்டுக்கான SPM தேர்வில் சிறந்த அடைவு நிலையைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் டி.ஏ.பி.யை சேர்ந்த லாபிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பாங் ஹோக் லியோங் தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

SPM தேர்வில் 9 A அல்லது அதற்கும் மேற்பட்ட சிறந்த அடைவு நிலையைப் பெற்ற தமது லாபிஸ் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 18 மாணவர்கள் மேற்கல்வி பயில்வதை ஊக்குவிக்கவும், கல்வி நிதிக்காகவும் மாணவர்களுக்கு தமது அன்பளிப்பாக பாங் ஹோக் லியோங், தலா 1,000 வெள்ளியை வழங்கினார்.

சம்பந்தப்பட்ட மாணவர்கள் சிறந்த அடைவு நிலையைப் பெற்று பள்ளிக்கும், லாபிஸ் வட்டாரத்திற்கும் பெருமை சேர்ப்பதற்கு துணையாக இருந்த பள்ளி ஆசிரியர்களுக்கும், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும் வாழ்த்துகள் உரித்தாகுக.

இவர்கள் வருகின்ற காலத்திலும் தொடர் வெற்றிகளை குவிக்க தமது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வதாக பாங் ஹோக் லியோங் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்