Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மனித உரிமை ஆணையத் தலைவர் பதவி விலகினார்
தற்போதைய செய்திகள்

மனித உரிமை ஆணையத் தலைவர் பதவி விலகினார்

Share:

2022 முதல் 2025 வரை மனித உரிமை ஆணையத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோ டாக்டர் ராமாட் முகமாட் பதவி விலகி உள்ளார். வருகின்ற வியாழன்கிழமை தொடங்கி தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர் சுஹாக்காம் எனப்படும் மனித உரிமை ஆணையத்தின் தலைமைத்துவத்தை வழிநடத்துவார் என பிரதமர் துறையின் இலாகாவின் மனித உரிமை சட்ட விவகாரப் பிரிவு இன்று அறிவித்துள்ளது.

2022 முதல் மனித உரிமை ஆணையத்தில் பணியாற்றிய டாக்டர் ரஹ்மாட் மனித உரிமை நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக நின்று வெற்றிகரமாக செயல்படுத்தியவர் என அப்பிரிவு தனது அறிக்கையில் வெளியிட்டதுடன் மாட்சிய தாங்கிய பேரரசருடன் கலந்துரையாடியப்பின் சுஹாகாம் எனப்படும் மனித உரிமை ஆணையத்தின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் என அது குறிப்பிட்டிருந்தது.

மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து டாக்டர் ரஹ்மாட் விலகியிருந்த போதிலும், கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தொடங்கி ஏ.ஐ.ஏ.சி யின் ஆலோசகராக பணியாற்ற பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என அது மேலும் தெரிவித்திருந்தது.

Related News