Dec 4, 2025
Thisaigal NewsYouTube
வயது குறைந்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரம்
தற்போதைய செய்திகள்

வயது குறைந்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரம்

Share:

வயது குறைந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர், மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். 19 வயதுடைய அந்த இளைஞர், செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அபு பகார் மனாட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் முற்பகுதியில் மூவாரில் உள்ள வீடொன்றில் 13 வயது பெண்ணுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையை புரிந்ததாக அந்த இளைஞர் மீது குற்றச்சாட்டுச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 376 பிரிவின் கீழ் அந்த இளைஞர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News