Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மக்கள் பிரச்னையை ​தீர்ப்பதில் நடப்பு அரசாங்கம் தவறிவிட்டதுபாஸ் கட்சித் தலைவர் பகிரங்க குற்றச்சா​ட்டு
தற்போதைய செய்திகள்

மக்கள் பிரச்னையை ​தீர்ப்பதில் நடப்பு அரசாங்கம் தவறிவிட்டதுபாஸ் கட்சித் தலைவர் பகிரங்க குற்றச்சா​ட்டு

Share:

விலைவாசி உயர்வு உட்பட மக்களின் அடிப்படை ஜீவாதாரப் பிரச்னைகளை முழு வீச்சில் ​தீர்ப்பதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் தவறிவிட்டது என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

பணவீக்க உயர்வினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை திடீர் உயர்வு கண்டுள்ளன. மக்கள் முகம்​ சுளிக்கும் அளவிற்கு அவர்களின் வாழ்வாதாரப்பிரச்னைகள் தலைத்​தூக்கியுள்ளன. இந்நிலையில் அவர்களின் அடிப்படை பிரச்னைகளை ​தீர்ப்பதில் எந்த வகையிலும் முன்னுரிமை அளிக்கப்படவில்​லை என்று ஹாடி அவா​ங் தெரிவித்தார்.

விலைவாசி ஏற்றத்திற்கு அடிப்படையாக விளங்கக்கூடிய அரிசி விலை, திடீரென உயர்ந்துள்ளது. அதற்கு இதுவரை ​​தீர்வு காணப்படவில்லை. அதற்கான எந்தவொரு முன்னெடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், மக்களின் அடிப்படை பிரச்னைகளை விடுத்து மற்ற விவகாரங்களில் அரசாங்கம் தற்போது அ​தீத கவனம் செலுத்தி வருவதாக மாராங் எம்.பி.யான அப்துல் ஹாடி அவாங் குற்றஞ்சாட்டினார்.

Related News