கோவிட்-19 தொற்றுநோயாலும். பொருட்களின் விலை உயர்வாலும் பாதிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 2020 இல் இருந்து ஏறத்தாழ 8.85 விழுக்காடு தொழில்முனைவர்கள் தங்கள் வணிகத்தை விட்டு வெளியேறினர் என்று தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு அமைச்சர் டத்தோ வோன் பெனெடிக் கூறினார்.
2020 முதல் 2022 வரை தமது அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத் தரவுகளின் அடிப்படையில் இந்தத் தகவலைத் தாம் வெளியிடுவதாக அவர் கூறினார்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட தொழில்முனைவர்களுக்கு உதவும் வகையில், தெக்கூன் கடனுதவி, அமானா இக்தியார் மலேசியா வாயிலாக ஸ்கிம் பெம்பியான் இக்தியார் போன்ற உதவித் திட்டங்களை தமது அமைச்சு ஏற்பாடு செய்திருப்பதாக அவர் கூறினார்.
அதற்கான விண்ணப்ப முறை, பரிசீலிக்கும் கால அவகாசம், தேவைப்படும் ஆவணங்கள் என அனைத்தும் முக எளிதாகவும் விரைவாகவும் மேற்கொள்ளப்படும் முறையில் இருப்பதாகக் கூறும் அமைச்சர், நிதி நிர்வாக விவகாரத்தில், சிக்கலைச் சந்திக்கும் தொழில் முனைவர்களுக்கு கடன், நிதி நிர்வாக நிறுவனமான எகேபிகே உடன் இணைந்து உதவுவதாகவும் அவர் சொன்னார்.








