தொழிலாளர் சேமநிதி வாரிமான இபிஎப். பின் 81 விழுக்காட்டு சந்தாதாரர்கள், பணி ஓய்வுப் பெறும் போது அவர்களுக்குப் போதுமான சேமிப்பு இருக்காது என்று கண்டறியப்பட்டுள்ளது.
19 விழுக்காட்டினர் மட்டுமே தங்களின் 55 ஆவது வயதில் தலா 2 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி சேமிப்பைக் கொண்டிருக்கும் அளவிற்கு அவர்களின் அடிப்படை சேமிப்பு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
55 வயது மற்றும் அதற்கு கீழ் பட்ட வயதுடைய 81 விடுக்காடு சந்தாதாரர்கள் பணி ஓய்வுப் பெறும் காலத்தில், போதுமான சேமிப்பைக் கொண்டிருக்காத காரணத்தால், அவர்கள் வறுமை கோட்டின் கீழ் தள்ளப்படலாம் என்று நிதி அமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார்.
தவிர, தற்போது 54 வயதை எட்டியுள்ள 2 லட்சத்து 75 ஆயிரம் இபிஎப். சந்தாதாரர்களில், ஒரு லட்சத்து 56 ஆயிரம் பேர் கூடிய பட்சம் 50 ஆயிரம் வெள்ளி அல்லது அதற்கு கீழ் பட்ட தொகையைத் தங்களின் வாழ்நாள் சேமிப்பாக கொண்டிருக்கின்றனர்.
இதன் பொருள், அடுத்த 20 ஆண்டுக் காலக்கட்டத்தில் அவர்களின் இபிஎப். ஓய்வு ஊதியம், மாதத்திற்குச் சராசரி 208 வெள்ளி என்பதையே அவர்களின் இந்த 50 ஆயிரம் வெள்ளி சேமிப்பு சித்தரிக்கிறது என்று பிரதமர் கூறினார்.

தற்போதைய செய்திகள்
பணி ஓய்வுப் பெறும் போது 81 விழுக்காடு இபிஎப் சந்தாதாரர்களுக்கு போதுமான சேமிப்பு இருக்காது
Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


