அந்நியத் தொழிலாளர்கள் எடுக்கப்படுவதற்கான விண்ணப்பங்கள் முடக்கப்பட்டிருப்பது பல்வேறு தொழில் துறைகளை வெகுவாக பாதிக்க செய்துள்ளது என்று மலேசிய தொழிற்சாலைகள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் 18 ஆம் தேதி அரசாங்கத்தின் இந்த அதிரடி முடிவினால், பல்வேறு தொழில் துறைகளைச் சார்ந்தவர்கள் தொழிலாளர்கள் பற்றாக்குறையை எதிர்நோக்கியிருப்பதுடன், உற்பத்தித் துறை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த சம்மேளனத்தின் தலைவர் டான் ஶ்ரீ சொஹ் தியன் லாய் தெரிவித்தார்.
அரசாங்கம் திடுத்திப்பென்று இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கக்கூடாது. இதனால், அந்நியத் தொழிலாளர்களை எடுக்க முடியாமல் பலர் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக சொஹ் தியன் லாய் தெளிவுப்படுத்தினார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


