ஷா ஆலாம், ஜனவரி.08-
ஷா ஆலம், செக்ஷன் 13 இல் 14 வயது சிறுமி ஒருவர், 17 வயது பையன் ஒருவனுடன் வீட்டை விட்டு ஓடி விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
அச்சிறுமி கடந்த திங்கட்கிழமை முதல் காணவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீஸ் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அச்சிறுமி தனது 17 வயது காதலன் என்று கூறப்படும் ஒரு பையனுடன் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.
17 வயது ஷாஷ்வின் பெரியழகன் என்ற பையனுடன் 14 வயது ஜெசிதா அருள் ஓட்டம் பிடித்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி Ramsay Embol தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் இருவரும் Block 40, தாமான் ஆலாம் மேகாவிலிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டதை மக்கள் ஆகக் கடைசியாகப் பார்த்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
அந்தச் சிறுமி தன் கைப்பேசியைக் கொண்டு சென்றுள்ளார் என்ற போதிலும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அந்தச் சிறுமியை அழைத்து சென்ற 17 வயது பையன், ஆலாம் மேகாவில் வேலை செய்து வந்ததாகவும், சிறுமி படிவம் இரண்டில் கல்விப் பயில்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்டர்வர்கள், தங்கியிருக்கும் இடம் தெரிந்தவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு ஏசிபி Ramsay கேட்டுக் கொண்டார்.








