Sep 22, 2026
Thisaigal NewsYouTube
அரச மன்னிப்புக் கேட்டு விண்ணப்பிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

அரச மன்னிப்புக் கேட்டு விண்ணப்பிக்கப்படும்

Share:

SRC International லஞ்ச ஊழல் வழக்கில் 12 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் சார்பாக அரச மன்னிப்புக் கேட்டு விண்ணப்பிக்கப்படும் என்று அவரின் வழக்கறிஞர் முகமட் ஷஃபீ அப்துல்லா தெரிவித்துள்ளார்.

najib ற்கு எதிரான தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து செய்துக்கொள்ளப்பட்ட சீராய்வு மனு, கடந்த வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அரச மன்னிப்புக் கேட்டு, விண்ணப்பத்தைத் தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக ஷஃபீ அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.

ஆகக் கடைசியாக, தீர்ப்பளித்த 5 நீதிபதிகளில் ஒருவர், நஜீப்பிற்கு ஆதரவாக வழங்கிய தீர்ப்பின் மையக் கருத்தைப் பயன்படுத்தி இந்த விண்ணப்பம் ஒரு வாரத்தில் சமர்பிக்கப்படும் என்று ஷஃபீ அப்துல்லா விளக்கினார்.

Related News