Oct 17, 2026
Thisaigal NewsYouTube

போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

ஷா ஆலம், அக்டோபர் 07-

கோலாலம்பூரில் உள்ள உறைவிடப் பள்ளியில் பாடகர் ஒருவரின் மகனும், இன்னும் சில மாணவர்களும் பகடிவதைக்கு ஆளாகியதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தப் பிரச்சனை தொடர்பாக இதுவரை 5 புகார்களை தாங்கள் பெற்றுள்ளதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் கூறினார்.

குற்றவியல் சட்டம் 323வது பிரிவின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்துள்ளனர். இவ்விவகாரம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று ஏசிபி சுலிஸ்மி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

51 வயது பாடகர் , தனது 14 வயது மகன் பகடிவதை செய்யப்பட்டதாகவும், அது குறித்து பள்ளி நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் புகார் அளித்துள்ளார்.

அந்த பாடகரைப் போல மேலும் சில பெற்றோர்களும் கடந்த ஆண்டு இறுதியில் தங்கள் பிள்ளைகள் பகடிவதைக்கு ஆளாகியதாக புகார் அளித்துள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →