Oct 16, 2026
Thisaigal NewsYouTube

சபா,சரவாவிற்கான நிலையான பயணக்கட்டணத்தை அறிவித்தது ஏர் ஆசியா

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சபா,சரவாவிற்கான நிலையான பயணக்கட்டணத்தை அறிவித்தது ஏர் ஆசியா

சிப்பாங், டிச.3-


அடுத்தாண்டு கொண்டாடப்படவிருக்கும் சீனப்புத்தாண்டை முன்னிட்டு வரும் ஜனவரி 24 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 4 ஆம் தேதி வரை சபா, சரவாவிற்கான விமானப் பயணங்களை மேற்கொள்வதற்கு இன்று டிசம்பர் 3 தேதியிலிருந்து அடுத்தாண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி வரையில் நிலையான குறைந்த கட்டண விகிதத்தை சிக்கன கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா தொடங்கியது.

கோலாலம்பூரிலிருந்து கூச்சிங், பிந்துலு, மீரி, சிபு அல்லது ஜோகூர் பாருவிலிருந்து கூச்சிங், சிபு அல்லது மீரி முதலிய வழித்தடங்களுக்கு ஒரு வழிப்பயணத்திற்கு 328 ரிங்கிட்டை விமானக் கட்டணமாக ஏர் ஆசியா அறிவித்துள்ளது.

கோலாலம்பூரிலிருந்து கோத்தா கினபாலு, தாவாவ், சண்டக்கான் அல்லது ஜோகூர்பாருவிலிருந்து கோத்தா கினபாலு வழித்தடங்களுக்கு ஒரு வழிப்பயணத்திற்கு 388 ரிங்கிட்டை விமானக் கட்டணமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

பெருநாள் காலத்தை முன்னிட்டு மலேசியர்களை ஒன்றிணைக்க உதவுவதில் அரசாங்கம் தொடர்ந்து கடப்பாட்டை கொண்டுள்ளது. அந்த வகையில் நியாயமான கட்டணத்தில் விமானப் பயணத்தை எளிதாக்குவதில் ஏர் ஆசிய விமான நிறுவனம் மேற்கொண்டு இந்த முயற்சிக்கு போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தமது பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார்.

இன்று சிப்பாங்கில் நடைபெற்ற ஏர் ஆசியா நிறுவனத்தின் சீனப்புத்தாண்டையொட்டிய விமானப் பயணத்திற்கான நிலையான குறைந்த கட்டண விகிதத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அந்தோணி லோக் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தீபகற்ப மலேசியாவிற்கும் சபா, சரவாவிற்கும் இடையே பயணம் செய்வதற்கு பல்லைக்கழக மாணவர்களுக்கு உதவும் பிலைசிஸ்வா மற்றும் அவர்களுக்கான 499 ரிங்கிட் உதவித்தொகை திட்டம் உட்பட தற்போது அரசாங்கம் மேற்கொள்ளும் முன்முயற்சிகளுக்கு ஏற்ப ஏர் ஆசியாவின் இந்த நிலையான கட்டண முறை அமைந்துள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

முன்னதாக, ஏர் ஆசியா அறிமுகப்படுத்திய நிலையான குறைந்த கட்டண விகிதத் திட்டத்தை அமைச்சர் அந்தோணி லோக், ஏர் ஆசியாவின் இதர பொறுப்பாளர்களுடன் இணைந்து முரசொலி எழுப்பி, அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

ஏர் ஆசியா மலேசியாவின் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ கேப்டன் பாரே மாஸ்புத்ரா கூறுகையில் 2024 ஆம் ஆண்டின் கடைசி மாதத்திற்கு முன்னதாகவே சீனப்புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகும் வகையில் 27 ஆயிரம் இருக்கைகளுடன் நிலையான கட்டண சலுகை அறிமுகப்படுத்துவதில் தாங்கள் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் ஏர் ஆசியா வர்ததக குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரி போ லிங்கம், ஏர் ஆசியா வர்த்தக குழுமத்தின் தலைமை அதிகாரி பால் கேரல்l, ஏர் ஆசியா விமான செயலாக்க துணை தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கேப்டன் செஸ்டர் வூ ஆகியோர் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →