எதிர்வருகின்ற மாநில பொது தேர்தல்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் தனித் தனியாக நடத்தப்படுவது தேர்தல் ஆணையத்திற்குச் சவாலாக அமையும் என்பதால் அதனை ஒரே நாளில் நடத்துவதற்கான சாத்தியத்தை உருவாக்க வேண்டும் என முன்னாள் தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் வான் அமாட் வான் ஒமார் கருத்து தெரிவித்துள்ளார் .
பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் ஆட்சியின் கீழ் இயங்கி வரும் சிலாங்கூர், பினாங்கு நெகிரி செம்பிலான் மாநிலங்களில் இந்த பிரச்சனை இல்லை. அந்த மூன்று மாநிலங்களும் ஒரு நாளில் மாநில தேர்தல் நடத்த உள்ளனர். இங்கு சிக்கலாக அமைவது பாஸ் கட்சியின் ஆட்சியின் கீழ்
இருக்கும் கிளந்தான், திரங்கானு மற்றும் கெடா மாநிலங்கள் தான் என அவர் மேலும் தெரிவித்தார். பாஸ் கட்சியின் தேர்தல் செயல்பாடுகளும் அவர்களின் நடவடிக்கைகளும் கேள்வி குறியாகவே இருப்பதாகவும் அவர்களின் திட்டங்கள் ரகசியமாகவே உள்ளது என வான் அமாட் கூறினார்.
வெவ்வேரு நாட்களில் தேர்தல்கள் நடத்துவதினால் நேரம் மற்றும் பணம் விரையம் ஏற்படுவதுடன் தேர்தல் ஆணையத்தின் ஊழியர்கள் இரண்டு முறை ஒரே வேலையைச் செய்வதற்கான வாய்ப்பும் ஏற்படும் என்றார் அவர்.








