பகாங், பேரா போன்ற மாநிலங்களில் பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்ததைப் போல மலாக்கா உட்பட இதர மாநிலங்களில் ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க வேண்டிய அவசியமில்லை என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
மலாக்காவில் உள்ள அரசியல் சூழலுக்கும், இதர மாநிலங்களில் உள்ள அரசியல் சூழலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன என்று அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில், பாரிசான் நேஷனல் அதிகமான தொகுதிகளை வென்று, அறுதி பெரும்பான்மையில் ஆட்சி அமைக்கும் அளவிற்கு அதிகாரம் பெற்றது. ஆனால், இதர மாநிலங்களில் அத்தகைய சூழல் இல்லை. பக்காத்தான் ஹராப்பானின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டிய நிலையும், நிர்பந்தமும் ஏற்பட்டதால் அந்த மாநிலங்களில் ஒற்றுமை அரசாங்கத்தை நிறுவ வேண்டிய அவசியம் ஏற்பட்டதை அகமட் ஜாஹிட் மறைமுகமாக கோடி காட்டினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


