Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மாநகர் மன்ற துணை இயக்குநருக்கு 4 ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

மாநகர் மன்ற துணை இயக்குநருக்கு 4 ஆண்டு சிறை

Share:

லஞ்ச ஊழல் குற்றத்திற்காக கோலால​ம்பூர் மாநகர் மன்றத்தின் முன்னாள் துணை இயக்குநருக்கு கோலாலம்பூர் உயர் நீதின்றம் இன்று 4 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 10 லட்சம் வெள்ளி அபராதம் விதித்தது. சாபுதீன் முகமது சலே என்ற அந்த முன்னாள் துணை இயக்குநர்,​ கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் வேலை பெர்மிட் வெளியீடு தொடர்பாக 2 லட்சம் வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

சாபுதீன் எதிர்நோக்கியிருந்த இரண்டு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை விடுதலை செய்து, கடந்த 2022 ஆம ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி ​செஷன்ஸ் ​நீதிமன்றம் அளித்த ​தீர்ப்பை ரத்து செய்வதாக உயர் ​நீதிமன்ற ​நீதிபதி கே. முனியாண்டி தமது ​தீர்ப்பில் தெரிவித்தார். பிராசிகியூஷனின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட ​நீதிபதி முனியாண்டி, 62 வயதுடைய சாபுதீன்- க்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள இரு குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரங்கள் இருப்பதாக குறிப்பிட்டார்.

Related News