கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒன்பது அனைத்துலக பள்ளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என்று போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசெயின் தெரிவித்துள்ளார்.
இந்த வெடிகுண்டு மிரட்டல், ஜெர்மன் மொழியில் தக்ஸ்டொரெர் என்ற பெயரில் இரண்டு வெவ்வேறு மின் அஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டார். இது தொடர்பாக போலீஸ் துறை புலன் விசாரணை செய்ததில் தக்ஸ்டொரெர் என்ற சொல்லானது, தொல்லை கொடுப்பவர் என்பது அர்ததமாகும்.
நாடு முழுவதும் ஒன்பது பள்ளிகளில் தொடக்கப்பட்டுள்ள இந்த மிரட்டல் தொடர்பில் மொத்தம் 19 புகார்களை போலீஸ் துறை பெற்றுள்ளது. எனினும் இந்த வெடிகுண்டு மிரட்டல் பொய்யானவை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக ரசாருடின் ஹுசெயின் குறிப்பிட்டார்.








