Oct 9, 2026
Thisaigal NewsYouTube

உள்ளூர் பொருட்களை வாங்கும் பிரச்சாரம் முடுக்கி விடப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
உள்ளூர் பொருட்களை வாங்கும் பிரச்சாரம் முடுக்கி விடப்படும்

இஸ்கண்டார் புத்ரி, ஜூன்.27-

2025 ஆம் ஆண்டுக்கான மலேசியப் பொருட்களை வாங்கும் பிரச்சாரம் தீவிரமாக முடுக்கி விடப்படும் என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிஸான் முகமட் அலி தெரிவித்துள்ளார்.

உள்ளூரைச் சேர்ந்த சிறு, குறு, நடுத்தர வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவர்கள், தாங்கள் தயாரிக்கும் மலேசியப் பொருட்களின் விற்பனைக்கானச் சந்தை வாய்ப்பை விரிவுபடுத்திக் கொள்ள உதவும் பொருட்டு இப்பிரச்சாரம் தீவிரப்படுத்தப்படும் என்று டத்தோ அர்மிஸான் குறிப்பிட்டார்.

இந்தப் பிரச்சாரம் வெற்றி பெறுவதற்கு பலதரப்பட்ட அமைச்சுகள் மற்றும் அரசாங்க ஏஜென்சிகள் தத்தம் வியூக முறைக்கு ஏற்ப உள்ளூர் பொருளாதாரத்தைப் பலப்படுத்த உதவ முடியும் என்று அவர் ஆலோசனைக் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →