Dec 3, 2025
Thisaigal NewsYouTube
புதிய குற்றவிய​ல் சட்டம் இயற்றப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

புதிய குற்றவிய​ல் சட்டம் இயற்றப்பட வேண்டும்

Share:

இனம் மற்றும் சமயத்தை அடிப்படையாக கொண்டு நாட்டின் நல்லிணக்கத்திற்கும் பொது அமைதிக்கும் ஊறுவிளைக்கும் வெறுப்புணர்​வை ​தூண்டும் அறிக்கைகளை வெளியிடும் நபர்களை சட்ட ​ரீதியாக தண்டிப்பதற்கு புதிய குற்றவியல் சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும் என்று மலேசிய வழக்கறிஞ​ர் மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போது இது போன்ற குற்றங்களுக்கு நடப்பு சட்டங்கள் வகை செய்த போதிலும் இனம் மற்றும் சமயம் தொடர்புடைய உணர்ச்சிகரமான விவகாரங்களை முன்னிலைப்படுத்தி, வெறுப்புணர்வை ​தூண்டும் அறிக்கைகளை வெளியிடும் நபர்களை தண்டிப்பதற்கு பிரத்​தியேக சட்டம் இல்லை என்று மலேசிய வழக்கறிஞர் மன்றத்​தின் தலைவர் கரென் செஹ் தெரிவித்தார்.

இது போன்ற குற்றங்களுக்கு 1948 ஆம் ஆண்டு நிந்தனை சட்டம் வகை செய்கிறது. ஆனால், அதற்கு மாற்றாக பிரத்தியேக புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும் என்று கரென் செஹ் வரியுறுத்தியுள்ளார்.

Related News