கோலாலம்பூர், டிசம்பர்.23-
வடகிழக்கு பருவ மழை காரணமாக தீபகற் மலேசியாவில் கிழக்குக் கரையோர மாநிலங்களில் டிசம்பர் 29 ஆம் தேதி வரை கனத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் இருக்கும்படி மலேசிய வானிலை ஆய்வு இலாகா மீண்டும் நினைவுறுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் 13 ஆம் தேதி தொங்கிய வட கிழக்கு பருவமழையானது, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகள் மற்றும் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று அந்த ஆய்வு மையம் நினைவுறுத்தியுள்ளது.








