Jul 29, 2026
Thisaigal NewsYouTube
வாகன சக்கரத்தில் போதைப் பொருள் கடத்தல்
தற்போதைய செய்திகள்

வாகன சக்கரத்தில் போதைப் பொருள் கடத்தல்

Share:

பிக்கப் வகை வாகனத்தின் சக்கரத்தில் 10.6 கிலோ எடை கொண்ட போதைப் பொருளைக் கடத்டியதற்காக இரு தாய்லாந்து நாட்டவர்களை போலீஸ் கைது செய்துள்ளது.

கெடா போலீஸ் தலைவர் டத்தோ ஃபிசோல் சாலெ இவ்விவகாரம் குறித்து வெளியிட்ட அறிகையில், கடந்த வியாழக்கிழமை, இரவு 11.00 மணி அளவில் ஆயெர் ஹித்தாம், ஜாலான் சுங்ஙாய் கோரோக் , கம்போங் பாரு பாலாய் போஸ் அருகே அந்த இரு ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாக கம்போங் பாரு பாலாய் போஸ் டத்தோ ஃபிசோல் சாலெ குறிப்பிட்டார்.

போலீசாரின் வருகையை உணர்ந்த அவர்கள் தப்பிக்க முயற்சித்தனர். ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததோடு அங்கேயே கைது செய்யப்பட்டனர். 10 பிளாஸ்டிக் பொட்டலங்களில் அடைத்து வைக்கப்பட்ட போதைப் பொருட்கள். அவர்கள் ஓட்டி வந்த பிக்கப் பவை காரின் கூட்தல் சக்கரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் ஏற்கெனவே இதே முறையைப் பயன்படுத்தி போதைப் பொருளைக் கடத்த முயற்சி செய்தவர் எனக் குறிப்பிட்ட டத்தோ ஃபிசோல், இம்முறை போலீசாரிடம் சிக்கினார் என்றார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு 3 லட்சத்து 49 ஆயிரத்து 800 வெள்ளியாகும்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்