Oct 9, 2026
Thisaigal NewsYouTube

லோரி மோதியதில் 7 வாகனங்கள் சேதம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
லோரி மோதியதில் 7 வாகனங்கள் சேதம்

ஷா ஆலாம், ஜூன்.27-

லோரி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களை மோதியதில் 7 வாகனங்கள் சேதமுற்றன. இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் ஷா ஆலாம், கிளேன்மேரி எல்ஆர்டி ரயில் நிலையத்திற்கு அருகில் நிகழ்ந்தது.

எல்ஆர்டி ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அந்த வாகனங்கள், எல்ஆர்டி ரயில் பயணிகளுக்குச் சொந்தமானதாகும் என்று ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

தங்கள் வேலை முடிந்து, ரயில் நிலையத்திற்குத் திரும்பியப் பின்னரே அங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தங்கள் வாகனங்கள் சேதமுற்றது அவற்றின் உரிமையாளர்களுக்குத் தெரிய வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் வாகனங்களின் உரிமையாளர்கள் 7 போலீஸ் புகார் அளித்து இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
லோரி மோதியதில் 7 வாகனங்கள் சேதம் | Thisaigal News