May 22, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பக்காப்பில் PAKATAN HARAPAN ஏற்புடைய வேட்பாளரை நிறுத்தவில்லை.
தற்போதைய செய்திகள்

சுங்கை பக்காப்பில் PAKATAN HARAPAN ஏற்புடைய வேட்பாளரை நிறுத்தவில்லை.

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 8-

பினாங்கு, சுங்கை பக்காப் சட்டமன்ற தொகுதியில், PERIKATAN NASIONAL, அத்தொகுதி மக்களுக்கு ஏற்புடைய உள்ளூர்வாசியை வேட்பாளராக களமிறக்கியிருந்தது.

ஆனால், PAKATAN HARAPAN, தகுதி மற்றும் கட்சியில் உள்ள அந்தஸ்தை பார்த்து, அத்தொகுதியை சாராத ஒருவரை வேட்பாளராக களமிறக்கியது.

PAKATAN HARAPAN-னின் அந்த வியூகமே, சுங்கை பக்காப் இடைத்தேர்தலில், தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டதாக, பெயர் குறிப்பிட விரும்பாத அம்னோ இளைஞர் பிரிவைச் சேர்ந்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

நகர்புறங்களில் உள்ள அம்னோ வாக்காளர்கள், வெளியிலிருந்து களமிறக்கப்படும் வேட்பாளரை ஆதரிக்க தயாராக உள்ள சூழலில், புறநகர் பகுதியிலுள்ள அம்னோ வாக்காளர்கள், அத்தகைய மனநிலையைக் கொண்டிருக்கவில்லை என்றாரவர்.

Related News