Feb 9, 2026
Thisaigal NewsYouTube
APU கருத்தரங்கின் போது ஆடையைக் களைந்த நபர் கைது: பல்கலைக்கழகம் விளக்கம்
தற்போதைய செய்திகள்

APU கருத்தரங்கின் போது ஆடையைக் களைந்த நபர் கைது: பல்கலைக்கழகம் விளக்கம்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.09-

ஆசிய பசிபிக் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கப் பல்கலைக்கழகத்தில் APU-வின் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கருத்தரங்கின் போது, தனது கால்சட்டையை அகற்றி அநாகரீகமாக நடந்து கொண்ட நபர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

முன்னதாக அந்த நபர் சுயஇன்பத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட புகார்களை APU பல்கலைக்கழகத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி குர்பர்தீப் சிங் மறுத்துள்ளார். அந்த மாணவர் சுயஇன்பத்தில் ஈடுபடவில்லை, ஆனால் தனது கால்சட்டையை அகற்றியிருந்தார் என்று அவர் ஊடகத்திடம் தெரிவித்தார்.

இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன் உடனடியாக போலீசார் வரவழைக்கப்பட்டனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட நபருக்கும் பல்கலைக்கழகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

மேலும், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று போலீசார் தெரிவித்துள்ளதாக குர்பர்தீப் கூறினார்.

"அவர் நிச்சயமாக APU மாணவரோ அல்லது ஊழியரோ அல்ல. பல்கலைக்கழகத்துடன் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை," என்று அவர் தெளிவுபடுத்தினார்.

இக்கருத்தரங்கை பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்யவில்லை என்றும், பல பள்ளிகள் இணைந்து பல்கலைக்கழக அரங்கை வாடகைக்கு எடுத்து நடத்தியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related News

2 வயது சிறுவனின் தாயார் அல்லது உறவினர்களைத் தேடும் போக்கோக் சேனா மாவட்ட சமூக நல அலுவலகம்

2 வயது சிறுவனின் தாயார் அல்லது உறவினர்களைத் தேடும் போக்கோக் சேனா மாவட்ட சமூக நல அலுவலகம்

டிபிகேஎல் நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்: பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது 'OSC’ இணையதளம்

டிபிகேஎல் நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்: பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது 'OSC’ இணையதளம்

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான பிரச்சனைகளை விவேகத்துடன் கையாள அரசாங்கம் போதிய கால அவகாசம் அளிக்கும் – யுனேஸ்வரன்

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான பிரச்சனைகளை விவேகத்துடன் கையாள அரசாங்கம் போதிய கால அவகாசம் அளிக்கும் – யுனேஸ்வரன்

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் வலுவடைந்தது

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் வலுவடைந்தது

சொஸ்மா சட்டத்தில் திருத்தம்: புதிய ஜாமீன் விதிகள் மற்றும் சிறப்பு நீதிமன்றம் அமைக்க அரசாங்கம் முடிவு

சொஸ்மா சட்டத்தில் திருத்தம்: புதிய ஜாமீன் விதிகள் மற்றும் சிறப்பு நீதிமன்றம் அமைக்க அரசாங்கம் முடிவு

ஜோகூர் பாருவில் சிறுவன் துன்புறுத்தப்பட்ட விவகாரம்: 4 பதின்ம வயது சிறுவர்கள் கைது

ஜோகூர் பாருவில் சிறுவன் துன்புறுத்தப்பட்ட விவகாரம்: 4 பதின்ம வயது சிறுவர்கள் கைது