Sep 27, 2026
Thisaigal NewsYouTube
கோர விபத்து இரு சகோதர்கள் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

கோர விபத்து இரு சகோதர்கள் உயிரிழப்பு

Share:

ஜோகூர், பத்து பகாட் - குளுவாங் சாலையில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில், இரு சகோதரர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து நேற்று மாலையில் ஸ்ரீ லாலாங்பள்ளி அருகில் நிகழ்ந்தது.

30 வயது பஸ்லி யுசைனி சைனல் அபிதீன் மற்றும் 20 வயது இர்பான் ஹெல்மி ஆகியோர் தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். கனமழை காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்த இவர்களது கார், சாலையின் எதிர்திசையில் வந்த இரு வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த மேலும் இரு சகோதரர்கள் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நான்கு சகோதரர்களும் டொயோட்டா வியோஸ் காரில் குளுவாங்கிலிருந்து ஆயர் ஈத்தாம் நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த போது இத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

Related News