இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் மாது ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நேற்றிரவு 9.45 மணியளவில், பாசீர் கூடாங், ஜாலான் மாசாய்-கொங் கொங் சாலையில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக ஶ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் டாக்டர் முகமட் ரொஸ்லான் முகமட் தஹீர் தெரிவித்தார்.
இந்த விபத்தில், கொங் கொங்கிலிருந்து மாசாயை நோக்கி, 23 வயதுடைய ஆடவர் செலுத்திய பெரோடுவா அக்சியா கார், வேகக் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் வந்துக்கொண்டிருந்த புரோட்டோன் வாஜா காரை மோதியதில், பெரோடுவா அக்சியாவில் பயணித்த மாது ஒருவர் கடுங்காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்ததாக முகமட் ரொஸ்லான் குறிப்பிட்டார்.

Related News

போலீஸ் படையின் முன்னாள் நம்பர் 2-க்கு யுடிஇஎம்மில் புதிய பொறுப்பு

2027 பட்ஜெட்டில் சம்பள உயர்வா? ரமணன் சூசகம்

விசா இல்லா வசதியை வேலைக்காக பயன்படுத்த வேண்டாம் – இந்தியப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை


