Oct 16, 2026
Thisaigal NewsYouTube

விபத்தில் எண்மர் உயிரிழந்தனர், சிபுவில் சம்பவம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விபத்தில் எண்மர் உயிரிழந்தனர், சிபுவில் சம்பவம்

சிபு, நவ. 22-

சரவாக், சிபு, சரிகாயிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பான் போர்னியோ ஜாலான் சரியாய் - சிபுசாலையில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட கோர சாலை விபத்தில் 7 அந்நிய நாட்டவர்கள் உட்பட எண்மர் உயிரிழந்தனர்.

நேற்று பிற்பகல் 3.40 மணியளவில் எண்மர் பயணம் செய்த பெரோடுவா அல்ஸா கார், எம்.பி.வி. 4 வீல் டிரைவ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்த வேளையில் எம்.பி.வி. 4 வீல் டிரைவ் வாகன ஓட்டுநர், கடுங் காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதில் பெரோடுவா அல்ஸா காரில் பயணம் செய்தவர்களின் இருவர் வெளியே தூக்கி வீசப்பட்ட வேளையில் அறுவர் காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டனர்.

அந்த அறுவரின் உடல்களை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படையினர் அதிகமான ஆள்பலத்தை பயன்படுத்தியதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →