ஜோகூர் மாநிலம் பூலாய் ஜெயா பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி, இரவு 7.09 மணியளவில், பொதுமக்கள் சிலர் நீர்த்தேக்கத்தில் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்ததாக இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் இடைக்காலத் தலைவர் சைஃபுல்லா ஜாயா தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்டது பெண் ஒருவரின் சடலம் என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இதனிடையே, உயிரிழப்பிற்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகின்றது.
தற்போதைய நிலவரப்படி, இந்தச் சம்பவத்தில் குற்றச்செயலுக்கான எந்தவொரு அறிகுறியும் கண்டறியப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.








