Aug 13, 2026
Thisaigal NewsYouTube
பாரம்பரிய கட்டிடத்திலிருந்து கான்கிரீட் இடிந்து விழுந்தது – இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா தம்பதி காயம்
தற்போதைய செய்திகள்

பாரம்பரிய கட்டிடத்திலிருந்து கான்கிரீட் இடிந்து விழுந்தது – இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா தம்பதி காயம்

Share:

பினாங்கின் பிரபலமான ஆர்மீனியன் தெரு பகுதியில் உள்ள பாரம்பரிய கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து மரத்தூண் மற்றும் கான்கிரீட் சிதிலங்கள் கீழே விழுந்ததில், இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா தம்பதியினர் இருவரும் தலையில் காயமடைந்தனர்.

அவர்களுக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் அந்தப் பகுதியை தங்களது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து கட்டிடத்தின் நிலைத்தன்மையை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

Related News