போலியான கணக்குகளைக் காட்டி சமூகப் பாத்காப்பு அமைப்பான பெர்க்கேசோவிடம் இருந்து 2 இலட்சம் வெள்ளிக்கு மேலான நிதியை கோரிய தனியார் நிறுவனத்தின் மனிதவள நிர்வாகி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் தடுத்து வைக்கப்பட்டார்.
35 வயதுடைய அந்தப் பெண், இன்று காலை 10 மணியளவில் ஜோகூர் பாரு ஆணையத்தில் அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்த பின்னர் கைது செய்யப்பட்டார்.
ஊழியர்கள் உறுதி பாரத்தில் போலியான தகவல்களைஇணையம் வாயிலாக பெர்க்கேசோவுக்கு அந்தப் பெண் அனுப்பியுள்ளார்.
அந்தப் பெண் கைது செய்யப்பட்டதையும் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டதையும் ஜோகூர் மாநில ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டத்தோ அஸ்லியாஸ் உறுதிப்படுத்தினார்.








