Jun 29, 2026
Thisaigal NewsYouTube
கேமரான் மலை பயணத்தில் மாயமான 19 வயது இளைஞர் பெசுட் அருகே சடலமாக காணப்பட்டார்
தற்போதைய செய்திகள்

கேமரான் மலை பயணத்தில் மாயமான 19 வயது இளைஞர் பெசுட் அருகே சடலமாக காணப்பட்டார்

Share:

கேமரான் மலைக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 19 வயது இளைஞர், கம்போங் புக்கிட் ஜெருக் பகுதியில் உள்ள சாலையோர புதர் ஒன்றில் சடலமாக காணப்பட்டார்.

நேற்று மாலை 6.40 மணியளவில், பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், அவரது சடலமும், அதன் அருகே அவரது மோட்டார் சைக்கிளும், மீட்கப்பட்டதாக பெசுட் மாவட்ட போலீஸ் தலைவர் ரோசைம் அப் ரஹீம் தெரிவித்துள்ளார்.

கம்போங் பெட்டிங் லிந்தாங் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தின் சிசிடிவி காட்சிப் பதிவில், வெள்ளிக்கிழமை அதிகாலை 1.38 மணியளவில், அந்த இளைஞர் வந்து போன காட்சிகள் பதிவாகியுள்ளன.

அதன் பின்னர், கேமரான் மலைக்குச் செல்லும் வழியில், அவரது மோட்டார் விபத்திற்குள்ளாகியிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அந்த இளைஞரின் பெற்றோர் கார் ஒன்றில் கேமரான் மலைக்குச் சென்ற நிலையில், அந்த இளைஞர் தனது மோட்டாரில் தனியாகப் பயணம் செய்துள்ளார்.

இந்நிலையில், அவரது சடலமானது சவப்பரிசோதனைக்காக பெசுட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு