Sep 27, 2026
Thisaigal NewsYouTube
லங்காவி எல்லையில் அதிரடி ஆய்வு: கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்க அமைச்சர் சைபுடீன் உத்தரவு
தற்போதைய செய்திகள்

லங்காவி எல்லையில் அதிரடி ஆய்வு: கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்க அமைச்சர் சைபுடீன் உத்தரவு

Share:

மலேசிய - தாய்லாந்து எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடீன் நசுத்தியோன் இஸ்மாயில் இரண்டு நாள் அதிகாரப்பூர்வப் பயணமாக லங்காவிக்கு வருகை தந்துள்ளார்.

எல்லையோரப் பாதுகாப்புத் தயார்நிலையை ஆய்வு செய்த அமைச்சர் சைபுடின், தெலுக் ஏவா மற்றும் தெலகா ஹார்பர் துறைமுகப் பகுதிகளில் வான்வழி மற்றும் தரைவழி மேற்பார்வையிட்டார்.

இந்த ஆண்டு ஏப்ரல் 22 வரை, கெடா மாநிலத்தில் மட்டும் மானிய விலைப் பொருட்கள் கடத்தல் தொடர்பாக 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சுமார் 1.21 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பதையும் சைபுடீன் விளக்கினார்.

கடத்தல்காரர்களின் முக்கிய இலக்காக டீசல் மற்றும் பெட்ரோல் இருப்பதைச் சுட்டிக்காட்டிய சைபுடீன், , எரிபொருள் கசிவைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்தார்.

நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதோடு, மானிய விலைப் பொருட்கள் அண்டை நாடுகளுக்குக் கடத்தப்படுவதால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்பைத் தடுக்க அரசு உறுதியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News