ஜோகூர் பாரு, டிசம்பர்.18-
ஜோகூர் பாருவில் அடுக்குமாடி வீடமைப்புப் பகுதிக்கு அருகே உள்ள ஓர் ஆற்றில் அழுகிய சடலம் மீட்கப்பட்டது. நேற்று மாலை 5.59 மணியளவில் கம்போங் பாக்கார் பத்து, சுங்கை பாயு புத்ரி ஆற்றில் ஓர் ஆணின் சடலம் மிதப்பதாக பொதுமக்களிடமிருந்து போலீசார் தகவல் பெற்றதாக ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவூப் செலாமாட் தெரிவித்தார்.
சடலம் கிட்டத்தட்ட முற்றாக அழுகி விட்டதால் அந்த நபரை அடையாளம் காண முடியவில்லை. எந்தவோர் அடையாள ஆவணமும் காணப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
மரணத்திற்கானக் காரணத்தைக் கண்டறிவதற்கு பிரேதம், சுல்தானா அமீனா மருத்துவமனையின் சவக் கிடங்கிற்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக ரவூர் செலாமாட் தெரிவித்தார்.








