Oct 9, 2026
Thisaigal NewsYouTube

கணக்கியல் அதிகாரிக்கு 3,300 ரிங்கிட் அபராதம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கணக்கியல் அதிகாரிக்கு 3,300 ரிங்கிட் அபராதம்

அம்பாங், ஜூன்.24-

தன்னுடன் ஒரே வீட்டில் வாடகைக்கு இருந்த ஆடவர் ஒருவர் குளித்துக் கொண்டு இருப்பதை ரகசியமாக வீடியோ படம் எடுத்த நபருக்கு அம்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மூவாயிரத்து 300 ரிங்கிட் அபராதம் விதித்தது.

30 வயது முகமட் ஃபாமி அக்மால் என்ற அந்த நபர், கடந்த ஜுன் 20 ஆம் தேதி அம்பாங், தாமான் உகேய் பெர்டானாவில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆடவர் ஒருவரின் கண்ணியத்திற்கு இழுக்கு சேர்த்த கணக்கியல் அதிகாரியான அந்த நபரின் அருவருக்கத்தக்கச் செயலை மாஜிஸ்திரேட் கண்டித்தார்.

எனினும் தனக்கு எதிரான குற்றத்தை அந்த நபர் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →