ஜெராந்துட், ஆகஸ்ட்.17-
பகாங்கின் ஜெராந்துட்-லிப்பிஸ் சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில், பதினான்கு வயது இளம் பெண் ஒருவர் உயிரிழந்ததோடு, ஐந்து பேர் படுகாயமடைந்தனர். ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த கார், எண்ணெய் டாங்கி லாரியுடன் மோதியதால் இந்த விபத்து நேர்ந்ததாக பகாங் தீயணைப்பு - மீட்புப் படையின் பொதுத் தொடர்பு அதிகாரி ஸுல்ஃபட்லி ஸாகாரியா தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் காரில் பயணித்த இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் ஓட்டுநர் உட்பட மற்ற ஐவரும் காயமடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.








