Apr 2, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போவில் சோகம்: மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழப்பு!
தற்போதைய செய்திகள்

ஈப்போவில் சோகம்: மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழப்பு!

Share:

ஈப்போ, ஜாலான் கம்பார் பகுதியில் இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் 67 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்று வியாழக்கிழமை காலை சுமார் 7.15 மணியளவில், சிம்பாங் புலாயிலிருந்து நகர மையத்தை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது மோதியது. இதில் பலத்த காயத்திற்கு ஆளான அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீஸ் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 42 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சைக்காக ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதியவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Related News