கோலாலம்பூர், அக்டோபர்.0
நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் சுமார் 27,877 கைதிகள், தற்போது தடுப்புக் காவலில் உள்ளனர் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் தெரிவித்துள்ளார்.
அவ்வழக்குகளைத் திறம்பட நிர்வகிக்க, மலேசிய கூட்டரசு நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் அலுவலகம் மூலம், நீதிபதிகளுக்கு அரசாங்கம் வழிகாட்டுவதாகவும், நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் அஸாலினா குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், தலைமைப் பதிவாளர் அலுவலகம் மற்றும் சிறை துறையின் தகவல்களின் படி, குற்றவியல் வழக்குகளுக்கான சராசரி காத்திருப்புக் காலம், 3 முதல் 24 மாதங்கள் வரை இருக்கும் என்றும் தனது எழுத்துப்பூர்வ பதிலில் அஸாலினா தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 2011 ஆம் ஆண்டில், குற்றவியல் வழக்குகளை முடிக்க 12 மாத காலக் கெடுவை, தலைமை நீதிபதி நிர்ணயித்ததாகவும் அஸாலினா தெரிவித்துள்ளார்.








