கிள்ளான், செப்டம்பர்.23-
காப்பார், ஜாலான் காப்பாரை நோக்கிச் செல்லும் ஜாலான் ஹஜி அப்துல் மானான் சாலையின் சமிக்ஞை விளக்குப் பகுதியில் இரு மோட்டார் சைக்கிளோட்டிகள் சண்டையிட்டுக் கொண்ட காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அந்த இரு நபர்களையும் போலீசார் தேடி வருவதாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி. எஸ். விஜயராவ் தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை காலை 8 க்கும் 9 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகள் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளி தொடர்பில் புக்கிட் ராஜா போலீஸ் நிலையத்தின் தலைவரிடமிருந்து புகார் கிடைத்து இருப்பதாக விஜயராவ் மேலும் கூறினார்.








