Jul 31, 2026
Thisaigal NewsYouTube
பயனுள்ளதாக அமைந்தது மடானியின் ஓர் ஆண்டு நிறைவு விழா
தற்போதைய செய்திகள்

பயனுள்ளதாக அமைந்தது மடானியின் ஓர் ஆண்டு நிறைவு விழா

Share:

புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கிய மடானி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவு விழா பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைந்தது.

அரசு நிறுவனங்களின் பல்வேறு செயல்பாடுகளை பற்றி தெரிந்து கொள்வது முதல் வேலை வாய்ப்புகளை தேடுவது வரை மடானி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவு விழா இனிதே தொடங்கியதாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

ஜொகூர், ரியல் எஸ்டேட் பேச்சுவார்த்தையாளரான 45 வயதுடைய மைக் சாவ் கூறுகையில் அறிமுகமில்லாத பல அரசு சார்ந்த நிறுவனங்களை சந்திக்க முடிந்ததாகவும் அவற்றின் செயல்பாடுகளை பற்றி நிறைய கற்று கொள்ள முடிந்ததாகவும் தெரியவந்தது.

மாணவர்களுக்கு எதிர்கால வேலை வாய்ப்பு, பொதுமக்களுக்கான சிறப்பு கழிவு பொருட்கள், இலவச சிகிச்சை போன்ற திட்டங்கள் வருகை புரிந்த அனைவருக்கும் பெரும் பயனாக அமைந்ததாக கூறப்படுகின்றன.

Related News