மோசடி பேர்வழி என்று தெரியாமல், இனிக்க இனிக்க பேசிய வார்த்தைகளால் தன்னை திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் அந்நபரிடம், தனித்து வாழும் தாயார் ஒருவர் தனது வாழ்நாள் சேமிப்புப்பணமான ஒரு லட்சத்து 70 ஆயிரம் வெள்ளியை இழந்துள்ளதாக போலீசில் புகார் செய்துள்ளார்.
40 வயது அரசு ஊழியரான அந்த மாது, கடந்த மாதம் இன்ஸ்டர்கிராம் வழியாக தொடர்பு கொண்ட ஆடவர் ஒருவரிடம் லவ் ஸ்கேம் மூலம் பணத்தை இழந்துள்ளதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஶ்ரீ யஹாயா ஓத்மான் தெரிவித்தார்.
அந்த நபரை கரம் பிடிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் மருத்துவ செலவுக்காக அவர் கடனாக கேட்ட 1,500 வெள்ளியை முதலில் வழங்கிய அந்தப் பெண், பின்னர் கட்டம், கட்டமாக பெரும் தொகையை அந்த நபருக்கு வழங்கி ஏமாந்துள்ளதாக தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார் என்று யஹாயா ஓத்மான் குறிப்பிட்டார்.
ஒரு லட்சத்து 70 ஆயிரம் வெள்ளியை பறிகொடுத்துள்ள அந்த மாது, வங்கியின் வாயிலாக ஒன்பது ரொக்கப் பண பரிவர்த்தனையை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.








