Dec 3, 2025
Thisaigal NewsYouTube
திடீர் விபத்து: 39 பயணிகளுடன் வந்த பேருந்து மோதல்!
தற்போதைய செய்திகள்

திடீர் விபத்து: 39 பயணிகளுடன் வந்த பேருந்து மோதல்!

Share:

பெந்தோங், செப்டம்பர்.14-

பகாங், பெந்தோங்கில், டெர்மினல் பெர்செபாடு கோம்பாக் பேருந்து முனையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த 39 பயணிகளுடன் வந்த விரைவுப் பேருந்து விபத்துக்குள்ளானது. கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து, எதிரே வந்த மூன்று வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது என பெந்தோங் மாவட்டக் காவற்படையின் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஸைய்ஹாம் முகமட் காஹார் தெரிவித்தார்.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும், விபத்தைப் பார்த்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறும் ஸைய்ஹாம் கேட்டுக் கொண்டார்.

Related News