Oct 16, 2026
Thisaigal NewsYouTube

மேரு சந்தையில் அதிசடிச் சோதனை – 11 குற்றங்கள் கண்டறியப்பட்டன

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மேரு சந்தையில் அதிசடிச் சோதனை – 11 குற்றங்கள் கண்டறியப்பட்டன

நவ. 27-

சிலாங்கூர் மாநில உள்நாட்டு வாணிபம், பயனீட்டாளர் விவகார அமைச்சு, புத்ராஜெயாவின் அமலாக்கப் பிரிவு, கிள்ளான் மாநகராட்சி மன்றம், ஆகியவை இணைந்து கிள்ளான் மேரு சந்தையில் ஒருங்கிணைந்த அதிரடி சோதனை நடவடிக்கையை மேற்கொண்டன. இந்த திடீர் சோதனையில் அங்குள்ள சுமார் 350 கடைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

மீன், கோழி, இறைச்சி, காய்கறிகள் போன்ற அடிப்படைத் தேவைக்கானப் பொருட்களின் விலை, எடை, அளவு குறித்த விதிமுறைகளை சரிபார்க்கப்பட்டதோடு, கிள்ளான் மாநகராட்சி, கடைகளின் உரிமம், பிற விதிமுறைகளை அனைத்தும் கவனிக்கப்பட்டதாக, சிலாங்கூர் மாநில உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் அமலாக்கப் பிரிவு அதிகாரி Md Zaki bin Abd Samad தெரிவித்தார்.

இந்த அதிரடிச் சோதனையில் 11 குற்றச் செயல்களும் விதிமீறல்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில், 3 பொருட்களின் விலை குறிப்பிடாதது குற்றங்கள் தராசு பயன்பாட்டில் 7 குற்றங்கள், கட்டுப்[படுத்தப்பட்டப் பொருட்களை விற்க அனுமதிக்கப்படும் தனி உரிமம் இல்லாத 1 குற்றமும் கண்டறியப்பட்டன.

சந்தை உரிமையாளர்களும் வியாபாரிகளுமரசாங்கம் விதித்துள்ள அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது இந்த ஒருங்கிணைந்த அதிரடிச் சோதனை எனத தெரிவித்தார் Md Zaki பயனீட்டாளர்களின் நலனைப் பாதுகாக்கவும், நேர்மையான வியாபாரத்தை ஊக்குவிக்கவும் தொடர்ந்து முயற்சிகளை அனைத்து அமலாக்கத் தரப்பு மேற்கொள்ளும் எனக் குறிப்பிட்ட அவர், விலைவாசி உயர்வு, தரக் குறைபாடு போன்ற பிரச்சினைகளை அறிவிக்க பொதுமக்களைக் கேட்டுக் கொள்வதாக Md Zaki தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →