Sep 22, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் மொத்த விற்பனை நிலையத்தில் ஊழியருக்கு கத்திக் குத்து
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் மொத்த விற்பனை நிலையத்தில் ஊழியருக்கு கத்திக் குத்து

Share:

நேற்று சனிக்கிழமை கோலாலம்பூரில் உள்ள மொத்த விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த 30 வயதுடைய ஆடவர் ஒருவர், அடையாளம் தெரியாத மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

காயமடைந்தவர் செலாயாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், அவரது நிலை சீராக இருப்பதாக செந்துல் மாவட்ட போலீஸ் இடைகாலத் தலைவர் ஜஸ்னி ஸுல்பா தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கான காரணம் மற்றும் சந்தேக நபரை அடையாளம் காண போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் போலீசாரை தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related News

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்