Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பதின்ம வயதுடைய இளைஞர் மானபங்கம், ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

பதின்ம வயதுடைய இளைஞர் மானபங்கம், ஆடவர் கைது

Share:

கோம்பாக்,ஜன.9
கடந்த வெள்ளிக்கிழமை கோம்பாக், பத்து கேவ்ஸ், ஜாலான் லக்சமா வில் ஒரு வீட்டில் பதின்ம வயதுடைய இளைஞர் ஒருவர், மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட இளைஞர், கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 12.01 மணியளவில் இது குறித்து போலீஸ் புகார் செய்தததைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 41 வயதுடைய அந்த நபர் கைது செய்யப்பட்டதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் நோர் அரிஃபின் முஹமாட் நசிர் தெரிவித்தார்.

காலையில் நாசி லெமாக் வாங்கச் சென்ற அந்த பதின்ம வயதுடைய இளைஞரை வீட்டில் கொண்டு சென்று விடுவதாக கூறி, தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிய அந்த நபர், சுமார் 700 மீட்டர் தொலைவில் உள்ள தனது வாடகை வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆபாச சேட்டைப்புரிந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அந்த இளைஞரை வீட்டிற்கு கொண்டு வந்து விட்ட அந்த நபர், கையில் 20 வெள்ளியை கொடுத்ததாக போலீஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று நோர் அரிஃபின் தெரிவித்தார்.

பிடிபட்ட நபர், 2027 சிறார் சட்டம் மற்றம் பாலியல் தொல்லை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவின் கீழ் நான்கு நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்