Jul 21, 2026
Thisaigal NewsYouTube
தடுப்புக் காவல் முடிந்தவுடன்  தமீம் தஹ்ரி மீண்டும் கைது: நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

தடுப்புக் காவல் முடிந்தவுடன் தமீம் தஹ்ரி மீண்டும் கைது: நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

Share:

முகநூல் மூலமாக மிரட்டல் விடுத்த வழக்கில் இரண்டு நாள் தடுப்புக் காவல் இன்றுடன் முடிந்ததையடுத்து, தமீம் தஹ்ரி அப்துல் ரசாக் என்பவரை லங்காவி போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

மத வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துதல் அல்லது அவமதிப்பது தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் லங்காவி, குவா போலீஸ் நிலையத்தில் செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக லங்காவி மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் கைருல் அசார் நூருதீன் தெரிவித்தார். அவர் நாளை லங்காவி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளார்.

முன்னதாக, முகநூலில் இந்தியர் ஒருவரை நபர் ஒருவரை மிரட்டியதாகக் கடந்த மார்ச் 10-ஆம் தேதி செய்யப்பட்ட புகாரைத் தொடர்ந்து, வெளிநாட்டிற்குத் தப்பி ஓடியதாகக் கூறப்பட்ட தமீம் தஹ்ரி, கடந்த சனிக்கிழமை போர்ட்டிக்சன் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அதனைத் தொடர்ந்து குற்றவியல் சட்டத்தின் கீழ் இரண்டு நாட்கள் அவர் விசாரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News