Dec 2, 2025
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

வங்கி ஊழியர்களின் பணி ஓய்வுக்கான வயது வரம்பு 61 ஆக உயர்த்தப்பட்டது

Share:

நாட்டில் உள்ள வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களின் பணி ஓய்வுக்கான வயது வரம்பு 61 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மலேசிய வர்த்தக வங்கிகள் சங்கத்திற்கும், என்.யூ.பி.ஈ எனப்படும் தேசிய வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கத்திற்கும் இடையில் செய்துக்கொள்ளப்பட்ட புதிய கூட்டு சம்பள ஒப்பந்தத்தில் இதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக, என்.யூ.பி.ஈ. யின் பொதுச் செயலாளர் ஜெ.சோலமன் தெரிவித்தார்.

இந்த பணி ஓய்வு வயது வரம்பில் , முழு நேர பணியாளர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளார்களே தவிர, ஒப்பந்த தொழிலாளர்கள் அல்ல என்பதையும் சோலமன் விளக்கினார்.

Related News