Jan 22, 2026
Thisaigal NewsYouTube
திருச்சி விமான நிலையத்தில் 47 மலைப்பாம்புகளுடன் பிடிபட்ட பயணி
தற்போதைய செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் 47 மலைப்பாம்புகளுடன் பிடிபட்ட பயணி

Share:

கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு சென்றடைந்த விமானத்​தில் பயணி ஒருவர், தனது பயணப்பெட்டியில் 47 மலை​ப்பாம்புகள் மற்றும் பல்லிகள் வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. ஓர் இந்தியப் பிரஜையான ஹூசைன் மன்சூர் என்பவர் , கடந்த ஜுலை 29 அம் தேதி சனிக்கிமை பாத்திக் ஆயிர் என்ற மெலிண்டோ ஏர் விமானத்தில் கோலாலம்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்தை சென்றடைந்த போது, சுங்கத்துறை சோதனையில் மலைப்பாம்பு மற்றும் பள்ளிகள் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பயணப்பெட்டி பாதுகாப்பு சோதனையை ​​மீறி, அந்த மலைப்பாம்புகள் எவ்வாறு விமானத்திற்குள் கொண்டு செல்லப்பட்டன என்பது தெரியவில்லை. கோலாலம்பூரில் மிக சாமாத்தியமாக அதிகாரிகளின் கண்களை மறைத்த அந்த இந்தியப் பிரஜை, திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை சோதனையில் சிக்கினார்.

மலைப்பாம்பு மற்றும் இதர ஊர்வனங்களை கடத்துபவர் என்று நம்பப்படும் அந்த இந்தியப்பிரஜை, திருச்சி விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அந்த மலைப்பாம்புகள் மற்றும் உடும்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related News