Dec 24, 2025
Thisaigal NewsYouTube
ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதைக்கான உறுதிப்பாடு நாட்டை கட்டியெழுப்ப முடியும்: கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதைக்கான உறுதிப்பாடு நாட்டை கட்டியெழுப்ப முடியும்: கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் வலியுறுத்து

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.24-

நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு குடிமகனும் மதிக்கப்படும் போதும், பாதுகாக்கப்படும் போதும், நாட்டின் எதிர்காலத்திற்குப் பங்களிக்க இடமளிக்கப்படும் போதும் உண்மையான ஒற்றுமை மலர்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

உலகம், பொருளாதார நிச்சயமற்றத்தன்மை, மனிதாபிமான மோதல்கள் மற்றும் சமூகப் பிளவுகளை எதிர்கொள்ளும் வேளையில், மலேசியா தனது எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப ஒற்றுமை, உரையாடல் மற்றும் பரஸ்பர மரியாதையையே அடிப்படையாகத் தேர்ந்தெடுத்துள்ளது என்று டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.

நல்லிணக்கம் என்பது தற்செயலாக உருவாவதல்ல, அது நியாயமான கொள்கைகள், சம வாய்ப்புகள் மற்றும் பன்முகத்தன்மைக் கொண்ட மக்களிடையே நிலவும் புரிதல் ஆகியவற்றால் உருவாக்கப்படுகிறது என்று பிரதமர் கூறினார்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, வெறுப்பை நிராகரித்து, மற்றவர் மீது பரிவு காட்டும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டார்.

மலேசியாவில் வாழும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் தனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட பிரதமர், இந்தத் பண்டிகை நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும் என்று கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related News