பேராக் மற்றும் பினாங்கு மாநிலங்களுக்கு இடையிலான மெகா குடிநீர் திட்ட பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் அடுத்த வார இறுதியில் கையெழுத்தாகும் என பினாங்கு முதலமைச்சர் , சாவ் கோன் இயாவ் தெரிவித்துள்ளார்.
பிபிஏ ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சாவ் கோன் இயாவ், இந்த ஒப்பந்தம், ஈப்போ நகரில் நடைபெறவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தண்ணீரின் விலை மற்றும் பல முக்கிய தொழில்நுட்ப விவகாரங்கள் குறித்து இரு மாநில நிபுணர்களும், அதிகாரிகளும் தற்போது தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக அவர் கூறினார்.அனைத்து தொழில்நுட்ப அம்சங்களும் இறுதி செய்யப்பட்டவுடன் ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தாகும்.
வடக்கு தீபகற்ப மலேசியாவின் நீர் தேவையை நிவர்த்தி செய்யவும், பினாங்கின் வீட்டு உபயோகம் மற்றும் தொழில்துறை தேவைகளை பூர்த்தி செய்யவும் இந்த மெகா நீர் மாற்றுத் திட்டம் ஒரு முக்கிய உத்தியாக அமையவுள்ளது சாவ் கோன் இயாவ் விளக்கினார்.








