நேற்று இரவு 8 மணியளவில் பலத்த காற்றுடன் பெய்யத் தொடங்கி கனத்த மழையில் பல இடங்களில் சாலையோர மரங்கள் வேரோடு பெயர்த்துக்கொண்டு சாய்ந்தன.
இதில் செலாயாங் நகராண்மைக்கழகத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட 11 இடங்களில் மரங்கள் வேரோடு பெயர்த்துக் கொண்டு, வாகன போக்குவரத்து இடையூற்றை ஏற்படுத்தின.
சாய்ந்த மரங்களை வெட்டி அகற்றுவதற்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 3 மணி வரையில் சுமார் ஐந்து மணி நேரம் பொது தற்காப்பு படையினரும் செலயாங் நகராண்மைக்கழகப்பணியாளர்களும் முழு வீச்சில் பணியில் ஈடுபட்டனர்.








