Jan 19, 2026
Thisaigal NewsYouTube
பேர் வாங்குவதற்காக அல்ல
தற்போதைய செய்திகள்

பேர் வாங்குவதற்காக அல்ல

Share:

வரும் ஹரிராயாவை முன்னிட்டு கூடுதலாக ஒரு நாள் பொது விடுமுறை வழங்கப்பட்டு இருப்பது, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம், பேர் வாங்கி கொள்வதற்காக இதனை வழங்கவில்லை என்று துணை நிதி அமைச்சர் அமாட் மஸ்லான் விளக்கம் அளித்துள்ளார்.

அதேவேளையில் தனியார் துறைக்கு இழப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்று அவர் விளக்கினார்.

கடந்த இரண்டு மூன்று ஆண்டு காலமாக ஹரிராயா பெருநாளை தூரத்தில் உள்ள உறவினர்களுடன் குதூகலமாக கொண்டாட இயலாமல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மக்கள் இருந்த வேளையில் இந்த முறை பெருநாளை ஒரு பெருவிழாவாக மகிழ்ச்சியுடன் மக்கள் கொண்டாடி மகிழ வேண்டும் என்ற நோக்கிலேயே கூடுதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அமாட் மஸ்லான் தெளிவுபடுத்தினார்.

Related News