ஜோகூர் பாரு, ஏப்ரல்.11-
ஜோகூர் பாரு, Aeon Bukit Indah- வில் உள்ள ஓரியண்டல் கோபி உணவகத்தில், வாடிக்கையாளரின் பையைப் பறித்துத் தப்ப முயன்ற திருடனை ஊழியர்கள் அதிரடியாகப் பிடித்துள்ளனர்.
உணவகத்தில் அமர்ந்திருந்த பெண்மணியின் பையை ஒரு நபர் திடீரெனப் பறித்துக் கொண்டு ஓட முயன்றார். இதைக் கண்ட ஊழியர்கள் உடனடியாகச் செயல்பட்டு, அந்தத் திருடனை மடக்கிப் பிடித்தனர். மீட்கப்பட்ட பை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இக்கட்டான நேரத்தில் துணிச்சலாகச் செயல்பட்ட தனது ஊழியர்களை ஓரியண்டல் கோபி உணவக நிர்வாகம் பாராட்டியதோடு, பொதுமக்கள் பொது இடங்களில் உடைமைகள் மீது கவனமாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டது.








